search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதிஷ் குமார்"

    • நிதிஷ்குமார் நாடு முழுவதும் பயணித்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
    • எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் நடைபெறும்,

    பாட்னா:

    பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித்தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

    இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், கூட்டம் முடிந்ததும் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். அது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விரைவில் மற்றொரு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுடன் இணைந்து செயல்படாமல் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளுடன் கை கோர்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

    தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா பேசுகையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்க விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நிலைப்பாட்டை விமர்சித்தார்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் பேசுகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நாங்கள் இருவரும் 25 ஆண்டுகளாக கடுமையான எதிரிகளாக இருந்து சண்டை போட்டவர்கள். இப்போது இணைந்து செயல்படவில்லையா? அதேபோலதான் நாம் அனைவரும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்
    • பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜனதாவை எப்படியாவது தோற்கடித்தாக வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முடியுமா? இந்த வேலையை செய்வது யார்? என்பது மில்லியன் கேள்வி. அப்படி ஒருங்கிணைத்தாலும் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது பில்லியன் கேள்வி.

    இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்ககும் முதற்படியாக நிதிஷ் குமார் பீகாரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். 18-க்கும் மேற்பட்ட கட்சித்தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலை ஒற்றுமையாக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

    கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர்கள் புறப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி., ரவி சங்கர் பிரசாத் நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தை கிண்டல் செய்துள்ளார்.

    ரவி சங்கர் பிரசாத் இதுகுறித்து கூறும்போது ''நிதிஷ் குமார் பாட்னாவில் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் திருமண ஊர்வலத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறார். ஆனால், யார் மணமகன் (பிரதம வேட்பாளர்). ஒவ்வொருவரும் தங்களை பிரதம வேட்பாளர் என அழைத்து வருகிறார்கள்'' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பாட்னாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார்.
    • நாளை மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னா செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கடந்த 12-ந் தேதி நிதிஷ்குமார் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அன்றைய தினத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் இருந்ததால் அவரால் வரமுடியவில்லை என்று கூறப்பட்டது.

    இதே போல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையை திறக்க இருந்ததால் அவராலும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. தங்களுக்கு பதில் 2-ம் கட்ட தலைவர்களை அனுப்புகிறோம் என்று கூறப்பட்டது.

    ஆனால் இதை நிதிஷ் குமார் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியின் தலைவர்கள்தான் கூட்டத்திற்கு வரவேண்டும். அப்போது தான் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த ஒருமித்த முடிவு எடுக்க முடியும் என்று கூறி எதிர்க்கட்சிகள் கூட்டத்தை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    அன்றைய தினம் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பாட்னாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

    இதன் அடிப்படையில் நாளை மறுநாள் (23-ந் தேதி) பாட்னாவில் எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

    திருவாரூரில் நேற்று நடைபெற்ற 'கலைஞர் கோட்டம்' திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் மாநிலம் பாட்னாவில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் 23-ந் தேதி நடைபெறுகிறது.

    அதில் பங்கேற்க நானும் பாட்னா செல்கிறேன். ஜனநாயக போர்களத்தில் கருணாநிதியின் தளபதியாக நானும் பங்கேற்க இருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

    இதன்படி நாளை மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னா செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்குமா? அல்லது கருத்து வேறுபாடு காரணமாக கடைசி நேரத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்காமல் காரணம் சொல்வார்களா? என்ற கேள்வியும் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் எந்தெந்த கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பது நாளை மாலைதான் தெரியவரும்.

    • பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை 23-ந்தேதி கூட்டி உள்ளார்.
    • பா.ஜ.க.வுக்கு கலக்கத்தை அளித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    பாட்னா :

    பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து, ஒரே வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் முழுவீச்சில் இறங்கி உள்ளார். அவர் எதிர்க்கட்சி தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார்.

    இந்த நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை அவர் வருகிற 23-ந் தேதி கூட்டி உள்ளார்.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே, உ.பி. முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுத்து, தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.

    இது ஒருவகையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கலக்கத்தை அளித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இந்த நிலையில் பாட்னாவில் நிதிஷ்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    நிகழ்ச்சி ஒன்றில் நான் பேசுகையில் மக்களவைக்கு முன்கூட்டியேகூட தேர்தல் வரலாம் என கூறியது பற்றி கேட்கிறீர்கள். மத்திய பா.ஜ.க. அரசுக்கு எப்போதுமே இந்த விருப்பம் இருக்கிறது. 2004-ம் ஆண்டு, அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் ஆதரவாக இல்லாதபோதும்கூட, முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.

    இருந்தாலும் நான் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என அப்போது கூறியது வேடிக்கையாகத்தான். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் கூட்டணி வலுப்பெற்றுவிட்டால் என்னாவது? இது அவர்களுக்கு பேரிழப்புகளைத் தரும். எனவே அவர்கள் முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன.
    • நான் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே ஒருபோதும் பாகுபாடு பார்த்தது இல்லை.

    பாட்னா :

    பீகார் மாநிலத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வோரை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, பாட்னாவில் உள்ள ஹஜ்பவனில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கலந்து கொண்டு, ஹஜ் யாத்திரை செல்வோரை வழியனுப்பி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் இந்த மாநிலத்துக்கு சேவையாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்த நாள் முதல், சகோதரத்துவ உணர்வை உறுதி செய்து வந்திருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சச்சரவை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன.

    வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. இந்த முயற்சிகளுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    நான் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே ஒருபோதும் பாகுபாடு பார்த்தது இல்லை. இந்த நாட்டின் முஸ்லிம்கள் இந்தியாவில் வசிப்பவர்கள்தான், அவர்கள் வேறெங்கும் இருந்து வந்தவர்கள் அல்ல என்று என் தந்தை எனக்கு போதித்து இருக்கிறார்.

    ஆனால் இந்த நாட்களில் அரசியல் சாசனத்துக்கு எதிரான எல்லாவிதமான செயல்களும் நடைபெற்று வருகின்றன. நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவும் அவர்கள் (பா.ஜ.க.வினர்) முயற்சிக்கிறார்கள். குறிப்பாக, சுதந்திர போராட்ட வரலாற்றை மாற்றி எழுத முயற்சி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக ஹஜ் யாத்திரை தடைப்பட்டு வந்த நிலையில், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கி இருப்பது குறித்து நிதிஷ்குமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.

    பீகாரில் இந்த ஆண்டு 2,399 பெண்கள் உள்பட 5,638 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதாக தகவல்கள் கூறுகின்றன.

    • விபத்துகளை பற்றி நான் பெரிதாக கருத்து தெரிவிக்க மாட்டேன்.
    • ரெயில்வேயை அருங்காட்சியகத்தில் வைக்க இந்த அரசு விரும்புகிறது.

    பாட்னா :

    பாராளுமன்ற தேர்தலை ஓரணியாக நின்று சந்திப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.

    வருகிற 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்த இக்கூட்டம், தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் சார்பில் ஒரு முதல்-மந்திரியும், மூத்த தலைவரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத்சிங் கூறியிருந்தார்.

    ஆனால், கட்சி தலைவர்தான் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார். நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    ஜூன் 12-ந் தேதி தங்களுக்கு வசதியாக இல்லை என்று காங்கிரசும், மற்றொரு கட்சியும் என்னிடம் தெரிவித்தன. எனவே, கூட்டத்தை தள்ளிவைக்க முடிவு செய்தேன். மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து புதிய தேதியை தெரிவிக்குமாறு காங்கிரசிடம் கூறியுள்ளேன். அதன்பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும்.

    ஆனால், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். கூட்டத்தில் பங்கேற்க சம்மதித்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பிலும் அந்தந்த கட்சிகளின் தலைவர்தான் பங்கேற்க வேண்டும்.

    எந்த கட்சியாவது, வேறு ஒரு பிரதிநிதியை அனுப்புவதாக சொன்னால், அது ஏற்புடையது அல்ல. உதாரணமாக, காங்கிரஸ் கட்சி, தலைவரை தவிர்த்து வேறு ஒருவரை அனுப்பி வைக்கும் என்ற செய்தி உலவுகிறது. அதை எங்களால் ஏற்க முடியாது.

    ஒடிசா ரெயில் விபத்து துயரமானது. விபத்துகளை பற்றி நான் பெரிதாக கருத்து தெரிவிக்க மாட்டேன். ஆனால், ரெயில்வேயை அருங்காட்சியகத்தில் வைக்க இந்த அரசு விரும்புகிறது.

    வாஜ்பாய் ஆட்சியில் நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, 1999-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடந்த ரெயில் விபத்துக்காக ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அதை ஏற்க வாஜ்பாய் விரும்பாதபோதிலும், எனது பிடிவாதத்தால் ஏற்றுக்கொண்டார். பிறகு மீண்டும் வாஜ்பாய் ஆட்சி அமைந்தபோது, ரெயில்வே மந்திரி ஆனேன்.

    ரெயில்வே மந்திரியாக, தற்போதைய பிரதமரின் மாநிலத்துக்கு கூட நான் நிறைய செய்துள்ளேன். ஆனால் அதையெல்லாம் அவர் நினைவில் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய கருத்துக்கணிப்பின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவில் தொடர்ந்து புகழ்பெற்ற தலைவராக இருந்து வருவது தெரியவந்துள்ளது.
    • நாடு முழுவதும் மோடி அலை ஆக்கிரமித்துள்ள போதிலும் ராகுல் காந்திக்கும் ஆதரவு அதிகரித்து இருப்பது அக்கட்சியினருக்கு புது தெம்பை கொடுத்து இருக்கிறது.

    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தற்போது யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை அறிய பொதுமக்களிடம் புதிதாக கருத்துக்கணிப்பை நடத்தியது.

    கடந்த 10-ந்தேதி 19-ந்தேதி வரை நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 71 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 7,202 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

    இந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி இன்னும் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்து வருகிறார் என்பது தெரியவந்தது. அதேசமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் ராகுல் காந்திக்கு பாரத ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு 15 சதவீதம் செல்வாக்கு அதிகரித்து உள்ளதும் தெரியவந்து இருக்கிறது.

    43 சதவீத பொதுமக்கள் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 3- வது முறையாக வெற்றி பெறும் என தெரிவித்து உள்ளனர். 38 சதவீதம் பேர் இந்த ஆட்சி வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள்.

    இன்று தேர்தல் நடந்தாலும் பாரதிய ஜனதாவை ஆதரிப்போம் என 40 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியை 29 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர். பாரதிய ஜனதாவுக்கு 2019-ம் ஆண்டு 37 சதவீதம் இருந்தது. இது தற்போது 39 சதவீதமாக அதிகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு 19 சதவீதத்தில் இருந்து 29 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

    2019-ம் ஆண்டு யார் பிரதமராக வர வேண்டும்? என நடந்த கருத்துக்கணிப்பில் மோடிக்கு 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். தற்போது இது 43 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அதேசமயம் ராகுல் காந்திக்கு இருந்த ஆதரவு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இருந்த போதிலும் பிரமதர் மோடியின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதை இந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

    25 சதவீதம் பேர் மோடியின் பேச்சுதிறமையை விரும்புவதாகவும், 20 சதவீதம் பேர் அவரது வளர்ச்சி திட்டங்களை ஆதரிப்பதாகவும், 13 சதவீதம் பேர் அவரது கடுமையான உழைப்பை பாராட்டுவதாகவும் தெரிவித்து உள்ளனர். மேலும் அவரது கவர்ச்சி தங்களை வெகுவாக ஈர்த்து இருப்பதாக 13 சதவீதம் பேரும் அவரது கொள்கை தங்களுக்கு பிடித்து உள்ளதாக 11 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.

    இம்மாதம் நடந்த கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அக்கட்சியினருக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ராகுல் காந்தியின் செல்வாக்கும் கடந்த தேர்தலை விட தற்போது சற்று அதிகரித்து உள்ளது.

    ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரைக்கு பிறகு அவரது செல்வாக்கு 15 சதவீதம் அதிகரித்து உள்ளது. 55 சதவீத மக்கள் மத்திய அரசின் திட்டங்களில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

    அடுத்த பிரதமராக யாரை ஆதரிக்கிறீர்கள் என்பதற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரை தவிர மேற்குவங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு 4 சதவீதம் பேரும், உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவுக்கு 3 சதவீதம் பேரும், நிதிஷ் குமாருக்கு 1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    இந்த புதிய கருத்துக்கணிப்பின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவில் தொடர்ந்து புகழ்பெற்ற தலைவராக இருந்து வருவது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மோடி அலை ஆக்கிரமித்துள்ள போதிலும் ராகுல் காந்திக்கும் ஆதரவு அதிகரித்து இருப்பது அக்கட்சியினருக்கு புது தெம்பை கொடுத்து இருக்கிறது.

    • வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த நிதிஷ்குமார் முயற்சித்து வருகிறார்.
    • இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    மும்பை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார்.

    மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார். அகிலேஷ் யாதவுடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தார். அப்போது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்ட உறுதி பூண்டனர்.

    சமீபத்தில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை நிதிஷ்குமார் சந்தித்தார். மேலும், ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு சென்ற நிதிஷ்குமாரும், பீகார் மாநில துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவும் முதல் மந்திரி ஹேமந்த் சோரனைச் சந்தித்துப் பேசினர்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சென்ற நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் உத்தவ் தாகரே மற்றும் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். அப்போது பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிய்னர் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர்.

    • பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டு உள்ளார்.
    • சந்திரசேகரராவ் பா.ஜனதாவை முழுவதும் எதிர்த்து வருகிறார்.

    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

    பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டு உள்ளார்.

    இதற்காக துணை முதல்-மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவுடன் சமீபத்தில் டெல்லி சென்று இருந்தார். அங்கு அவர் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கொல்கத்தா சென்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மற்றும் லக்னோ சென்று சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் ஆகியோரை நிதிஷ்குமார் சந்தித்தார்.

    மம்தா, அகிலேசை தொடர்ந்து ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவ் ஆகியோரை நிதிஷ்குமார் விரைவில் சந்திக்கிறார்.

    இதை ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். அவர் கூறும்போது, "ஒடிசா மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரிகளை நிதிஷ் குமார் விரைவில் சந்திக்கிறார். தேதி இன்னும் முடிவாகவில்லை" என்றார்.

    நவீன் பட்நாயக் பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனால் பாராளுமன்றத்தில் முக்கிய மசோதா தாக்கல் ஆகும் போது அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். சந்திரசேகரராவ் பா.ஜனதாவை முழுவதும் எதிர்த்து வருகிறார்.

    • டெல்லியில் மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்.

    புதுடெல்லி:

    டெல்லி வந்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார். லாலு பிரசாத் யாதவ் டெல்லியில் அவரது மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியிருக்கிறார். அவரைப் பார்த்து உடல்நலம் விசாரித்தார் நிதிஷ் குமார்.

    மேலும் இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர். வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்வதற்கு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ரெயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் தொடர்புடைய பண மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

    லாலு பிரசாத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்களை நிதிஷ் குமார் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பாஜகவை 100 தொகுதிகளுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என நிதிஷ் குமார் கூறியிருந்தார்.

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பீகாருக்கு மத்திய அரசு பெரிய அளவில் உதவ வேண்டும்.
    • நம்மைப்போன்ற ஏழை மாநிலங்கள், தங்களைத்தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைதான் உள்ளது.

    பாட்னா:

    மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவதாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.

    பீகாரில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்த ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார், கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென கூட்டணி மாறினார். அவர் பா.ஜ.க. கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியில் சேர்ந்து புதிய அரசை அமைத்தார்.

    வரும் நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று அவர் பாட்னாவில் நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவரிடம் எழுப்பிய கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- மத்திய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

    பதில்:- ஒருவர் என்ன எதிர்பார்க்க முடியும்? பீகாருக்கு மத்திய அரசு பெரிய அளவில் உதவ வேண்டும், சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வைத்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

    கேள்வி:- மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்து நீங்கள் வெளியேறிய பிறகு நிலைமை மோசமாக மாறிவிட்டதா?

    பதில்:- நாங்கள் கூட்டணியில் ஒன்றாக இருந்தபோதும் அவர்கள் மாநிலத்துக்கு என்று எதையும் செய்தது இல்லை. அவர்கள் அதைத்தான் இப்போதும் செய்கிறார்கள். ஏழ்மை நிலையில் உள்ள மாநிலங்களை முன்னேற்றாமல், அவர்கள் நாட்டை முன்னேற்றுவது குறித்து எப்படி எண்ண இயலும் என்பது எனக்கு வியப்பை அளிக்கிறது.

    அவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. அவர்கள் அரசியல் ஆதாயம் எதிர்பார்க்கிற இடங்களில் மட்டுமே தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் அரசியல் லாபங்கள் குறித்து மிகையாக மதிப்பிடுவதுபோல தெரிகிறது.

    நம்மைப்போன்ற ஏழை மாநிலங்கள், தங்களைத்தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைதான் உள்ளது. முன்பு மத்திய நிதி இல்லாதபோது அதைக் கடன் வாங்கி ஈடுகட்டினோம். இப்போது அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதுபோன்ற மத்திய அரசின் தலையீட்டை நாங்கள் ஒருபோதும் பார்த்தது கிடையாது.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    • தேஜ்பிரதாப் யாதவிடம் ரூ.3 கோடியே 20 லட்சம் சொத்து உள்ளது.
    • மந்திரிகளில் பெரும்பாலானோர் நிதிஷ்குமாரை விட பணக்காரர்களாக உள்ளனர்.

    பாட்னா :

    பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், தனது மந்திரிகள் அனைவரும் ஆண்டின் கடைசி நாளில் தங்களது சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதன்படி, அவர் உள்பட அனைத்து மந்திரிகளின் சொத்து மற்றும் கடன் விவரங்கள் பீகார் அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

    நிதிஷ்குமார் கையில் ரூ.28 ஆயிரத்து 135 ரொக்கமும், வங்கிகளில் ரூ.51 ஆயிரத்து 856-ம் உள்ளது. அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.16 லட்சத்து 68 ஆயிரம். அசையா சொத்துகள் மதிப்பு ரூ.58 லட்சத்து 85 ஆயிரம். மொத்த சொத்து மதிப்பு ரூ.75 லட்சத்து 53 ஆயிரம். ஒரே ஆண்டில் அவரது சொத்து மதிப்பு ரூ.18 ஆயிரம் அதிகரித்துள்ளது.

    டெல்லியில் துவாரகா பகுதியில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் அவருக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது.

    லாலுபிரசாத் யாதவின் மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவிடம் ரூ.75 ஆயிரம் ரொக்கமும், அவருடைய மனைவி ராஜஸ்ரீயிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் உள்ளது.

    லாலுவின் மற்றொரு மகனும், சுற்றுச்சூழல் துறை மந்திரியுமான தேஜ்பிரதாப் யாதவிடம் ரூ.3 கோடியே 20 லட்சம் சொத்து உள்ளது.

    மந்திரிகளில் பெரும்பாலானோர் நிதிஷ்குமாரை விட பணக்காரர்களாக உள்ளனர்.

    ×